உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியானாலும், இதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் இக்கதைக்கு சந்தானம் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்

 

 

யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை ‘இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார்.

இதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.இப்படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து