உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1 கிலோ 570 கிரேம் கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரொருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் இன்று (23) கைது செய்துள்ளனர்.

குச்சவெளி, மதுரங்குடா -செந்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

NC-VF 1909 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கொண்டு செல்வதாக திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து