உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன்?
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளார்.

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அறிமுக இயக்குனர்கள் சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து “ரைட்டர்” படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்‌ஷன்ஸ்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். ‘பொம்மைநாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம்.குமார், ஹரி, ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவு- அதிசயராஜ், இசை- சுந்தரமூர்த்தி, எடிட்டர் – செல்வா RK, கலை – ஜெயரகு, பாடல்கள்- கபிலன், அறிவு, இணை தயாரிப்பு-யாழிபிலிம்ஸ், வேலவன், லெமுவேல். தயாரிப்பு- பா.இரஞ்சித்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து