உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கியிருந்த 22 பேரில் இறுதி பத்து பேரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) 11பேர் நூற்றுக்கணக்கான நிலத்தடியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.இந்தநிலையில் நேற்று இறுதி பத்து பேரை மீட்கும் பணிகளை மீட்பு குழுவினர் மேற்கொண்டனர்.

இதன்போது, சம்பவ இடத்தில் பெரிய துளை அமைத்து அதன் வழியாக பூமிக்கு அடியில் சென்று பார்த்தபோது, தொழிலாளர்கள் 10பேரும் சடலமாக கிடப்பதை கண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் அந்த 10 உடல்களையும் வெளியே கொண்டு வந்தனர்.

கடலோர ஷாண்டோங் மாகாணத்தில் யந்தாய் பிராந்தியத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய சுரங்கத்தில் ஜனவரி 10ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் இருபத்தி இரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து