
போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதில் 3 விவசாயிகள் காயமடைந்தனர்.
செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம் என போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.