உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மட்டக்களப்பு நகரில்  இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாணவியும் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பஸ்சும் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து