உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இன்று அதிகாலை 6 மணியளவில் இராச வீதி சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலி பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி சீனிவாசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரளவு மனதளவில் பாதிக்கப்பட்ட மகனுக்கும் தந்தைக்கும் இடையில் காலை சிறு தர்க்கம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது மகன் இரும்பு கம்பியால் தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் ஊர் மக்களால் பிடித்து அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மனநோயினால் பிடிக்கப்பட்டு இருந்ததாகவும் தினந்தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சண்டைகள் இடம்பெற்று வருவதாகவும் இளைய மகன் தெரிவித்தார்.

தந்தையினை தாக்கும் போது தன்னால் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்பட்டதாகவும் மூத்த அண்ணன் ஆக்ரோசமாக தனது தந்தையை தாக்கி கொலை செய்ததாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 33 வயதுடைய இளைஞன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.மேலதிக விசாரணைகளையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஊடாக அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து