உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மத்திய கிரேக்கத்தில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தால் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமாகியுள்ளன.

நேற்று (புதன்கிழமை) 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் மதியத்திற்குப் பிறகு தாக்கி 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்தது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது, குப்பைகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததாகவும், ஆனால் அவருக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகரான ஏதென்ஸிலிருந்து கிட்டத்தட்ட 400 கி.மீ தொலைவில் உள்ள எலசோனாவிலிருந்து 20 கி.மீ தெற்கே இந்த மையப்பகுதி இருந்தது என்று ஏதென்ஸ் ஜியோடைனமிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலசோனாவிலிருந்து தெற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள லாரிசா நகர மக்கள், கட்டடங்கள் குலுங்கியதால் வெளியேறி வீதிகளில் தஞ்சை அடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஏதென்ஸ் ஜியோடைனமிக் இன்ஸ்டிடியூட்டின் துணை இயக்குனர் வஸ்ஸிலிஸ் கராஸ்டாதிஸ் கூறுகையில், ‘நிலநடுக்கம் 8 கிமீ ஐந்து மைல் ஆழம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் வலுவாக உணரப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்’ என தெரிவித்தார்.

பால்கன் நாடுகளான அல்பேனியா, கொசோவோ, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

எனினும், ஏதென்ஸ் ஆய்வகத்தின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி லாரிசாவுக்கு அருகிலுள்ள எலசோனா நகரிலிருந்து 21 கிலோமீட்டர் (13 மைல்) தெற்கே இருந்தது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து