வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் விவேக் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி கனிகா, ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம். யாதும் ஊரே யாவரும் கேளிர்,இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்,
இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறர்

கடந்த 16 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த அருண் பாண்டியன், இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோகுல் இயக்கி உள்ளார்.
தந்தை, மகள் பாச உறவை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நர்சிங் மாணவியான ஹெலனுக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது தந்தைக்கு அது பிடிக்கவில்லை.
ஒருநாள் காதலருடன் ஹெலன் வெளியே சென்று திரும்பும்போது போலீசார் தடுத்து நிறுத்தி, காதலன் மது அருந்தி இருந்ததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்கின்றனர்.
இந்த தகவலை அறிந்த தந்தை ஹெலனிடம் கோபப்பட்டு அவரோடு பேசுவதை நிறுத்துகிறார். இதனால் வேதனையில் ஹெலன் மாயமாகிறாள். அவரை தந்தை தேடி அலைகிறார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹெலன் என்ன ஆனாள் என்பதே படத்தின் கதை.