உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அம்பாறை – கல்முனை, பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலிலும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ச.இராஜன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்சினி, கல்முனை இளைஞர் சேனை அமைப்பின் பிரதிநிதி பிரதீபன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த 03ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த உணவு தவிர்ப்புப் போராட்டமானது பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து