உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன  இளைஞன் ஒருவரரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன்    மீட்டுள்ளதாக  கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில்  மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், அனுராதபுரத்திலிருந்து  சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிய  07 இளைஞர்கள்   நேற்று   கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள  விடுதியொன்றில் தங்கி இரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.

இந் நிலையில் மதுபோதையிலிருந்த குறித்த இளைஞன் இன்று அதிகாலை 01 மணியளவில் விடுதியின் மேல்மாடி  ஜன்னல் வழியாக  வெளியில் குதித்து காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.

இவ்வாறு சென்ற இளைஞனை கண்டு பிடிக்க   கொத்தமலை பொலிஸாரும் அதிரடிபடையினரும் காட்டுப்பகுதிக்குள் தேடுதலில் ஈடுட்ட நிலையிலே ரம்பொடை   ஆற்றுப்பகுதியின் கற்பாறையொன்றிலிருந்து   மீட்கப்பட்டுள்ளார்.

காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட  இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து