உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

குறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்த தருண் குமார்.இவர் மலைத்தேன் எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார். மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது தந்தை தேவராஜ் உடல் நலத்திற்காக மலைத்தேன் தேடி செல்கிறார். அபர்ணதியின் நிலையை அறிந்து அவருக்கு உதவுகிறார் தருண் குமார்.

 

இந்த பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ஊர் மக்கள் முன்னிலையில், வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரியாக பிரியாததால், சாமி வரம் கொடுக்கவில்லை என்று கூறி, ஊர் பெரியவர்கள் திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.
தருணை மறக்க முடியாத அபர்ணதி, ஊர் முடிவை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மனைவி அபர்ணதியின் சிகிச்சைக்காக மலை கிராமத்தை விட்டு ஊருக்குள் வரும் தருணுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
இறுதியில் சிக்கல்களை கடந்து மனைவி அபர்ணதியின் உயிரை தருண் காப்பாற்றினாரா? அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. கணேஷ் விநாயகன், மலை கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், கார்ப்ரேட் நிறுவனம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். ஒளிப்பதிவு.சுகுமார் இசை,சனந்த் பரத்வாஜ்
அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள்.
மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி.படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது:
இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான நானும் ரவுடிதான் படத்திலிருந்து நயன்தாராவின் பெயரான காதம்பரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளேன். முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி இருக்கிறது.
குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களை போன்று அல்லாது இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என கூறினார்.
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ்,
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து