உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

முட்டை காளான் குழம்பு

தேவையான பொருட்கள்

காளான் – கால் கிலோ

முட்டை – 6
பெ.வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 4
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – தேவைக்கு
துருவிய தேங்காய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு –

செய்முறை:

காளானை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டைகளை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில்சட்டியை வைத்து மிளகாய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய் துருவல் ஆகியவற்றை லேசாக   சூடக்கி கொள்ளவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து  விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும்.பின்னர்  காளான்களை போட்டு வதக்கவும்.அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் தூவி கிளறிவிடவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை கொட்டி வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த வெட்டிய முட்டையை  போட்டு கிளறிவிடவும்.குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கவும்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து