உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் நம் நகும் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் புகழ் பெற்றதாகும்.‌இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சொகுசு படகு ஒன்றில் 39 பேர் நம் நகும் ஏரியில் சவாரி சென்றனர்.இந்த படகு ஏரியின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென பலத்த காற்று வீசியது. இதில் படகு ஏரியில் கவிழ்ந்தது.படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.‌

இதுகுறித்து ஏரியில் மற்றொரு படகில் சவாரி சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 38 பேரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து