கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் கேம் விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவன் தாயார் கைத்தொலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் 14 வயது மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகக் கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார் கைத்தொலைபேசியைப் பறித்து வைத்துள்ளார். அதனைப் பொறுக்க முடியாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம், சுழிபுரம் – பிளவத்தைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது