உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வவுனியா நூலக வீதியில் இன்று (08) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நூலக வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான முதியவர் முச்சக்கரவண்டியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து