உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் இன்று காலை(வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.குறிப்பாக ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தினாலேயே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக ஆதவனின் நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.இதன்காரணமாக இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்றிருந்தது.

“2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன்” என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

“தனக்கு  விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து என்னை நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கடுமையாக கோபமடைந்த சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும்.“ என சவால் விடுத்திருந்தார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து