உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

துவாரக் ராஜா இயக்கத்தில் கார்த்திக், லிங்கா, மோனிஷா, கல்பிக்கா நடிப்பில்    ட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘பரோல்’.

துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே “காதல் கசக்குதய்யா” படத்தை இயக்கியவர்.‘பரோல்’ படத்தில் கார்த்திக் மற்றும் லிங்கா கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

இவர்களுக்கு ஜோடியாக மோனிஷா மற்றும் கல்பிக்கா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மேலும் வினோதினி, ஜானகி சுரேஷ், டி.கே.ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மகேஷ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை முனீஸ் கவனிக்கிறார்.

வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்.என்றாவது ஒருநாள்’ முன்னாள் மேயர் சைதை துரைசாமி யின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.

தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது.

குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”.

 

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து