உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

இறால் பிரைடு ரைஸ்

பாசுமதி அரிசி – 4 கப்
வெங்காயம் – 4

முட்டை – 4
பூண்டு – 1 டீஸ்பூன்
கேரட் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு
சோயா சோஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கட்டு

கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

பாசுமதி அரிசியை உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும்.

தாச்சியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இறாலை கொட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அதனுடன் பூண்டை சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்து கேரட்டையும் சேர்த்து பொரிக்கவும்.

முட்டையையும் ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறி விடவும்.நன்கு வெந்ததும் வேக வைத்த சாதத்தை கொட்டி கிளறவும்.

அதனுடன் சோயாசோஸ் , மிளகுத்தூள், வெங்காயம், வெங்காய்த்தாள் போன்றவற்றை கலந்து வேகவிடவும்.அவை வெந்து பிரைடு ரைஸ் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து