உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். புதிய பாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு என பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படம், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் இப்படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருந்தார். இப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.

இவ்வாறு சினிமாவில் பல்வேறு புதுமைகளை செய்யும் பார்த்திபன், அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரும் இப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். இதுவரை அருமையான 3 பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இயக்குனர் சுந்தர்.சி-க்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு டுவிட்டரில் கூறியதாவது: “எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்” என குஷ்பு தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகை குஷ்பு, பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
நடிகை குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்து அவரது கணவர் சுந்தர் சி-யும் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ணன்

பொடியன்குளம் கிராமத்தில் அப்பா, அம்மா, அக்காவுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ். இவர்கள் ஊரில் பஸ் நிறுத்தம் கிடையாது.
இங்கு இருக்கும் மக்கள் வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மேலூர் எனும் ஊருக்கு சென்று பேருந்து ஏற வேண்டும். மேலூர் ஊரில் இருக்கும் சிலர் பஸ் ஏற வந்த கௌரியை அசிங்கப் படுத்துகிறார்கள்.
இதனால் கோபமடைந்த தனுஷ், அவர்களை வெளுத்து வாங்குகிறார். பதிலுக்கு தனுஷை பழிவாங்க நினைக்கிறார்கள். ஒரு கட்டத்தில்  கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்ல நிற்கும்போது, பஸ் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த பஸ்ஸை அடித்து நொறுக்குகிறார்கள்.
இதை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி நட்டி, ஊர் பெரியவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைக்கிறார். இதையறிந்து வரும் தனுஷ், காவல் நிலையத்தை துவம்சம் செய்கிறார்.

கோபமடைந்த நட்டி, தனுசையும் ஊர் மக்களையும் பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து தனுஷ் தப்பித்தாரா? ஊர்மக்களை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.இயக்கம்-மாரி செல்வராஜ்,இசைசந்தோஷ் நாராயணன்,ஓளிப்பதிவு-தேனி ஈஸ்வர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து