உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சோயாமீற்வடை

தேவையான பொருட்கள்:

சோயாமீற் – 1 கப்

கடலை மா – 1 கப்
சோள மா – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை  நறுக்கி கொள்ளவும்.
முதலில் சோயாமீற்ரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி,கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

பின் ஓர் அகன்ற தாச்சியியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சோயாமீற்ரை தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின் அரைத்த  சோயாமீற்ரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து