உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரிடம் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபா போலி ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்றைய தினம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்து சென்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுதனை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிக பெறுமதி கொண்ட போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் அதனை மீட்ட பொலிசார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து