உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஈச்சங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். நேற்று மாலை வவுனியா நகரிலிருந்து ஈச்சங்குளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஈச்சங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியது.

விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் நீண்ட நேரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படாமல் வீதியில் கிடந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து சில மணி நேரங்கள் தடைப்பட்டிருந்தது.

விபத்து தொடர்பாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு பொது மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் நீண்ட நேரமாக அம்புலன்ஸ் வராத நிலையில் பொது மக்களால் மீட்கப்பட்டு முச்சக்கரவண்டி ஊடாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து