உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 2-ந்தேதி போய் சேர்ந்தது. இதில் பிலிப்பைன்சை சேர்ந்த ஊழியர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த கப்பல் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 14 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த கப்பல் துறைமுகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து வெளியேயும், கப்பலுக்கு உள்ளேயும் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த கப்பல் துறைமுகத்தை அடைந்தவுடன் அதில் இருந்த பொருட்களை இறக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட துறைமுக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடந்து வருகின்றன.

இதைப்போல கப்பல் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இந்த கப்பலில் பணியில் இருந்த தலைமை பொறியாளர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்ததாகவும், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்றும் கப்பல் நிர்வாகம் கூறியுள்ளது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து