உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், ஓவியருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 74.பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நடிகர் பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், நடிகர் பாண்டு இன்று அதிகாலை உயிரிழந்திருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மனைவி குமுதா தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.சென்னை ஓவிய கல்லூரி மாணவரான பாண்டு தமிழில் 1970ல் வெளியான ‘மாணவன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு, ‘பணக்காரன்’, ‘சின்ன தம்பி’, ‘ரிக்ஷா மாமா’, கில்லி’, ‘போக்கிரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவரது வசன உச்சரிப்பும், நடிப்பும் தனித்தன்மை வாய்ந்தது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘இந்த நிலை மாறும்’. இவரது சகோதரர் ‘இடிச்சபுளி’ செல்வராஜும் நகைச்சுவை நடிகர். தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா, சில வருட இடை வெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர்.

‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முந்திரிக்காடு

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘முந்திரிக்காடு’. இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார்.

இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல் திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோர் நடித்துள்ளாகள்.

ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை எல்.வி.கே.தாஸ் கவனிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கி உள்ளார் மு.களஞ்சியம்.படம் பற்றி அவர் கூறியதாவது: “
முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை படம். யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை பதிவு செய்திருப்பதாக” அவர் தெரிவித்தார்.

ஒரு தலை ராகம்’ படத்தின் இயக்குனர் இப்ராஹிம் காலமானார்

1980-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஒரு தலை ராகம்’. டி.ராஜேந்தர் எழுதியிருந்த, இப்படத்தின் கதையை படமாக இயக்கி, தயாரித்திருந்தார் இப்ராஹிம்.இப்படம் வெற்றி பெற்றதோடு, டி.ராஜேந்தர் எனும் பன்முக திறமை கொண்ட கலைஞனையும் உருவாக்கியது. அதன்பின் ஓரிரு படங்களை மட்டும் தயாரித்தார் இப்ராஹிம்.

இந்நிலையில் இயக்குனரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஒரேநாளில் நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், தயாரிப்பாளர் இப்ராஹிம் என அடுத்தடுத்து மூன்று பேர் மரணமடைந்தது, தமிழ் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்ராஹிம் மறைவுக்கு டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “1980ல் வெளியான என் முதல் படமான ‘ஒரு தலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம் அவர் அரங்கக்குடியில் பிறந்தவர். என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர்.
வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர். என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார். இந்த உலகை விட்டு பிரிந்தார். கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறிக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து