உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மணத்தக்காளி கீரை சட்னி

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை  – 2 பிடி

மிளகு –  ¼ டீஸ்பூன்
சீரகம்  – ¼ டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1 (விரும்பினால்)
சின்ன வெங்காயம்  – 10
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு  – தேவையான அளவு.
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

செய்முறை

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் எடுத்து கொள்ளவும்.
கீரையை சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம் மாறாது அவித்து எடுங்கள்.மிக்சியில் வதக்கிய கீரை, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், ப.மிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான மணத்தக்காளி கீரை சட்னி

மாங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்

மாங்காய் – 2
சின்ன வெங்காயம் – 15
பச்சை மிளகாய் – 2
கரட் சீவல் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பூ – ஒரு மேசைக்கரண்டி
பூண்டு – 4 பல்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – ஒரு கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
வறுத்த நிலக்கடலை – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியைக் களைந்து குழையாமல் சாதத்தை வேக வைத்து எடுத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை சேர்த்து தாளிக்கவும்.

பருப்பு வகைகள் சிவந்ததும் பூண்டைச் சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் மாங்காய்த் துருவல், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.

அனைத்தும் வதங்கியதும் கேரட் துருவல் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.அத்துடன் ஆற வைத்த சாதம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.

நன்கு கலந்து 5 நிமிடங்கள் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்.வண்ணமயமான சுவையான மாங்காய் சாதம் தயார்.சர்க்கரை சேர்ப்பதால் மாங்காயின் புளிப்புத் தன்மை குறைத்து, சுவையை அதிகரித்துக் கொடுக்கும்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து