உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இன்று எம்மைப் பயமுறுத்தும் கொடிய கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க விழிப்புணர் வடைவோம்

கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
———————————————-
(பாரதியாரின் சின்னஞ் சிறு கிளியே என்னும் பாடல் மெட்டு )
பென்னம் பெரும் புலியே -கோரோனா
பேரிடி யானவளே
வன்மனம் கொண்டவளே -எம்மை
வாட்டி வதைப்பது மேன் .
(பென்னம் பெரும் )

தேடி வருபவளே -எம்மைத்
திகைத்திடச் செய்வாயே
ஓடி ஒழித்திடினும் -உன்கரம்
உள்ளே இழுக்குதடி
(பென்னம் பெரு )

கொள்ளை கொண்டே நீயும் -எம்முடன்
கூடி வருகிறாயே
எல்லையில்லா துயிரை -நீயே
ஏப்பம் விடுகிறாயே .
(பென்னம் பெரும்)

சிறியோர் பெரியோர்கள்- என்னும்
சிந்தனை இல்லாதே
பறிமுதல் செய்தேநீ -புலியே
பாதகம் செய்வது மேன்
(பென்னம் பெரும்)

சொந்த பந்தங்களையும் -பிரித்துச்
சோதனை செய்கிறாயே
இந்த அநியாய மேன் -நாங்கள்
என்ன குறைகள் செய்தோம் .
(பென்னம் பெரும் )

பக்கம் உறவிருந்தும் -பொழுதில்
பார்க்க முடியலையே
துக்கம் வளர்கிறதே -துணைகள்
தூர விலகிறதே .
(பென்னம் பெரும் )

எப்போ அழிவாயென -உலகம்
ஏங்கித் தவிக்கிறதே
தப்பாது உனைக் கொல்ல -நாமும்
தனிமையைப் பேணுவமே .
(பென்னம் பெரும் )

முகத்துக்குக் கவசம் -இட்டு
மூச்சினை விடுவோமே
சகத்தினில்லுனையே -விரட்டிச்
சந்தோசம் காண்போமே
(பென்னம் பெரும் )

கைகளைச் சவர்க்காரத்தால் -என்றும்
கழுவியே கொள்வோமடி
வையத்தி லுனைப் போக்க -நாமும்
வல்லமை கொள்வோமடி
(பென்னம் பெரு

உன்னை யழித்து விட்டால் -உலகில்
உள்ளம் மலருமடி
இன்னும் தயங்காது -புலியே
எம்மைவிட் டோடிவிடு .
(பென்னம் பெரும் )

       ஆக்கம் ஆ.தகுணதிலகம்

                                                       

                                                                 நன்றி    கவிஞ்ஞரே

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து