இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மகராசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். இது தவிர ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை காலமானார்.
அவருக்கு வயது 90. ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் எஸ்.சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் அவர்களின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் “யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் செகண்ட் லுக் வெளியாகியிருந்தது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.