உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

டென்மார்க்கில் அமையவுள்ள மிகப்பெரிய செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு டென்மார்க்கின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்திற்கு 85 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.

35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க இந்த செயற்கை தீவு கைகூடவுள்ளது.

லினெட்டெஹோம் (டுலநெவவநாழடஅ) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோட், சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்படும்.

இந்த 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகவுள்ளது.

திட்டமிட்டபடி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டால், தீவின் பெரும்பாலான அஸ்திவாரங்கள் 2035ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும். 2070ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.

லினெட்டெஹோம் திட்டத்தில் ஒரு அணை அமைப்பும் உள்ளது. துறைமுகத்தை கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அவ்வணை அமைக்கப்பட இருக்கிறது.

சுமார் 400 கால்பந்து ஆடுகளங்களின் அளவிலான செயற்கைத் தீவைக் கட்டுவதற்கு முன், தீபகற்ப நிலப்பரப்பை மட்டும் உருவாக்க 80 மில்லியன் டன் மண் அப்பகுதிக்கு தேவைப்படும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இத்திட்டத்தை எதிர்த்து கோபன்ஹேகனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

இத்தீவின் கட்டுமானத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து, சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். கடல் படிமானங்களின் இயக்கம் மற்றும் நீரின் தரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலைகள் எழுந்துள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து