உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக அப்பகுதி கிராம சேவையாளரான மயூரனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸாருடன் வீட்டினை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அதன் போது வீட்டினுள் அறை ஒன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதை கண்டறிந்து , வீட்டில் இருந்தவரை கைது செய்தனர்.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களையும் மீட்டனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து