உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக சிறிய பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.

குறித்த ஆலயம் நேற்று இரவு விஷமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய தினம் காலை ஆலயம் இடித்தழிக்கப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று அது தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து