உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சர்வதேச அளவில் சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய 3 பரிமாணங்களில் நீடிக்கத்த்தக்க வளர்ச்சியை மேம்படுத்த ஐ.நா சபையின் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் செயல்பட்டு வருகிறது.54 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த கவுன்சில் ஐ.நா. அமைப்பின் இதய பகுதியாக கருதப்படுகிறது.

மேலும் ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறும் உச்சி மாநாடுகள் மற்றும் இதர மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த நிலையில் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்துக்கான ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில் இந்தியா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. இதே பிரிவில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் தேர்வு செய்யப்பட்டன.

இதனிடையே ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு இந்தியாவை தேர்வு செய்ததற்காக ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து