உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இங்கிலாந்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்ப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது ஜி 7 மாநாடு நடைபெறவுள்ள விடுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி 7 உச்சிமாடு நாளை ஆரம்பமாகவிருந்த நிலையில்,  ஒரு நாள் முன்னதாக இன்றைய தினம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் இங்கிலாந்தின் கார்விஸ் விரிகுடாவிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள ஃபால்மவுத் விடுதிக்கு வெளியே  பொதியொன்றிலிருந்து சந்கேத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து 100 விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் தான் ஜி 7 மாநாட்டிற்காக நாளை ஜூன் 11 வெள்ளிக்கிழமை முதல் உலகத் தலைவர்கள் சந்திப்பினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதன் பின்னர் விடுதியிலிருந்து ஊழியர்களும், விருந்தினர்களும் வெளியேற்றப்பட்டதுடன், உச்சி மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 11,000 பொலிஸ் அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

அது மாத்திரமன்றி இது தொடர்பான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை தொடங்கவிருக்கும் ஜி 7 உச்சி மாநாடு உலகின் மிக சக்திவாய்ந்த ஜனநாயக தலைவர்களை ஒன்றிணைக்கும் மாநாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழுவின் மற்ற உறுப்பினர்களில் கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி போடுவதை ஆதரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை தோற்கடிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்க பொரிஸ் ஜோன்சன் இந்த மாநாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து