பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் “காவி ஆவி நடுவுல தேவி” படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் “காவி ஆவி நடுவுல தேவி”. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். “காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார்.
இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர்.
கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்ஜாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 38. நடிகர் சஞ்ஜாரி விஜய், மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
அவரின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்ஜாரி விஜய்யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.