உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கியூபாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களும் எதிர்க்கட்சி வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

‘சட்ட உதவி மையம் கியூபலெக்ஸ்’ தொகுத்த புள்ளிவிபரங்கள், ஞாயிற்றுக்கிழமை சுமார் 100பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றன.

அரசாங்க எதிர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சனிக்கிழமை ஹவானாவின் தென்மேற்கே சான் அன்டோனியோ டி லாஸ் பானோஸ் நகரில் ஆரம்பமானது. பின்னர் விரைவில் நாடு முழுவதும் பரவியது.

வீதிகளில் இறங்கியவர்கள் பொருளாதாரத்தின் சரிவு, உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை, விலை உயர்வு மற்றும் கொவிட்-19 தொற்றை அரசாங்கம் கையாளுவது குறித்து கோபப்படுவதாகக் கூறினர்.

சில எதிர்ப்பாளர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து, அடிப்பது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

கியூபாவில் அங்கீகரிக்கப்படாத பொதுக்கூட்டங்கள் சட்டவிரோதமானது மற்றும் போராட்டங்கள் அரிதானவை. இதனிடையே, கியூபாவின் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவித்தவர்களை ‘கூலிப்படையினர்’ என்று விமர்சித்தார்.

கியூபா மீதான அமெரிக்கத் தடைகள் 1962ஆம் முதல் பல்வேறு வடிவங்களில் நடைமுறையில் உள்ளதே பற்றாக்குறைகளுக்கு காரணம் என ஜனாதிபதி மிகுவல் தியாஸ் கேனல் குற்றம் சாட்டினார்,

கியூபாவுடனான விரோதப் போக்கின் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா, கியூபர்களுடன் நிற்பதாகக் கூறியதுடன், வன்முறையிலிருந்து விலகி அதன் மக்களுக்குச் செவிசாய்க்குமாறு அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘கியூப மக்கள் அடிப்படை மற்றும் உலகளாவிய உரிமைகளை தைரியமாக வலியுறுத்துகின்றனர்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து