உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஈராக்கின் தெற்கு நகரமான நாசீரியாவில் உள்ள கொரோனா வைரஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில், குறைந்தது 60பேர் உயிரிழந்துள்ளதோடு 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தில் பல நோயாளிகளைக் காணவில்லை என்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

இறந்தவர்களில் இரண்டு சுகாதார ஊழியர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் கூடி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் இரண்டு பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

அல்-ஹூசைன் கொரோனா வைரஸ் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தொட்டி வெடித்ததிலேயே, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பிரதமர் முஸ்தபா அல் காதிமி மூத்த அமைச்சர்களுடன் அவசர சந்திப்புகளை நடத்தி, நசீரியாவில் சுகாதார மற்றும் சிவில் பாதுகாப்பு மேலாளர்களை இடைநீக்கம் செய்து கைது செய்ய உத்தரவிட்டதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் மருத்துவமனையின் மேலாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்ய உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம், பாக்தாத்தில் உள்ள கொவிட்-19 மருத்துவமனையில் ஒக்ஸிஜன் தொட்டி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 82பேர் உயிரிழந்தனர் மற்றும் 110பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து