உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் ஊடாக அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தலைமறைவாகியுள்ளவர்கள் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொற்றாளர்களை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கையினை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்த வேளையில் 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

குறித்த 6 பேரும் பி.சி.ஆர்.மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்றபோதே, குறித்த 6 பேரும் தலைமறைவாகியுள்ளதால் பொலிஸாரின் உதவியை சுகாதாரத் துறையினர் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து