உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயத்துக்கு உள்ளாகி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இளைஞன், வீதியால் சென்று கொண்டிருந்த வேளையில்  2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தப்பிச் சென்றுள்ள சந்தேகபர்களை தேடும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து