உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கரவெட்டி தெற்கில் ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட சுமார் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

கரவெட்டி தெற்கில் உள்ள கரவை மூங்கோடை முருகன் கோவிலில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானவர்கள் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் சுகாதார பிரிவினரால் அங்கிருந்த சுமார் 170 வரையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்ளை அடையாளம் காணவும் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதி முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து