உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பிசிஆர் பரிசோதனை செய்யும்போது தனக்கு வலி ஏற்பட்டதாகக் கூறி, பரிசோதனைக்கான மாதிரியைப் பெற்றுக்கொண்ட தாதியை பீங்கானினால் தாக்கியுள்ள சம்பவம் ஆனமடுவ வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

இதன்போது தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள தாதி, மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்திய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனமடுவ வைத்தியசாலையின், கொரோனா கட்டுப்பாட்டு பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர் ஆணமடுவ – குமாரகம விஹாரை ஒன்றின் பிக்கு என பொலிஸார் கூறினர்.காய்ச்சல் மற்றும் சளி காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் குமாரகம பகுதி விஹாரையின் 35 வயது பிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிக்குவிடம் பிசிஆர்.பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதற்காக அவர் பிசிஆர். பரிசோதனைகளின்போது மாதிரிகள் எடுக்கப்படும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அந் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போதே மாதிரிகளை பெறும்போது தனக்கு வலித்ததாக கூறி பிக்கு அந்த தாதியை,அருகிலிருந்த பீங்கானினால் தலையில் தாக்கியுள்ளார். இதனால் பீங்கான் சுக்கு நூறாகியதுடன், தாதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் பிக்குவைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

தாக்குதலால் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான தாதி, ஆரம்பக் கட்ட சிகிச்சைகளின் பின்னர் குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டதாக ஆனமடுவ வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பத்மினி அபேரத்ன கூறினார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து