உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வீட்டிலுள்ள விளக்குமாறு உடையும் வரை, லேலைக்கார பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டிலுள்ள மலசலகூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தனது முகத்தை மலசல கூட கொமட்டுக்குள் வைத்து, அசுத்தமான நீரை திறந்து விடுவாரென பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே, பொலிஸாருக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலை செய்த 11 பெண்களில் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி மாத்திரமன்றி, அவரது உறவினர்களும் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு பாரிய துன்புறுத்தல்களை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 11 பேரில், 03 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். ஒரு யுவதி பம்பலபிட்டியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், மற்றைய யுவதி நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஹிஷாலினி தீக் காயங்களுடன் மர்மமான முறையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்திருந்தார். ஏற்கனவே உயிரிழந்த யுவதிகளின் மரணங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த அனைத்து பெண்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து