உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் உள்ள மத்திய ஜெயில் தீப்பிடித்து 41 கைதிகள் பலியாகியுள்ளனர்.இந்தோனேசியா நாட்டில் அனைத்து ஜெயில்களிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.
அதேபோல இந்த ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து குற்றவாளிகள் ஆவர்.

அங்குள்ள ‘சி’ பிளாக்கில் 122 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் போதை மருந்து வழக்கில் கைதானவர்கள் ஆவர்.

அங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் கைதிகள் சிக்கிக் கொண்டனர். ஜெயில் அறைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் தப்பி செல்ல முடியவில்லை. தீயில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 39 பேர் காயம் அடைந்தனர்.

அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்து சம்பவத்தால் அங்கிருந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து