உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 

மட்டு- காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேரை நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலஜஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதரிகாரி காவற்துறை பரிசோதகர் கஜநாயக்கா தலைமையில் சம்பவதினமான நேற்று இரவு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள குறித்த வீடுகளை காவற்துறையினர் முற்றுகையிட்டனர் இதன் போது 36 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 38 வயதுடைய ஒருவரிடம் 90 மில்லிக்கிராம், 39 வயதுடைய ஒருவரை 110 மில்லிக்கிராம் கொண்ட 290 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்நில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் நாளாந்தம் போதைப் பொருள் , கஞ்சா, கசிப்புடன் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து