உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தாண்டிக்குளம் கொக்குவெளி இராணுவ முகாம் முன்பாக, நேற்று இரவு 7.00 மணியளவில் முச்சக்கரவண்டி மீது இராணுவ பேரூந்து மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த இராணுவ பேரூந்து கொக்குவெளி இராணுவ முகாமிற்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இடம்பெற்ற உடனே இவ்விடத்திலிருந்த இராணுவத்தினர் விபத்துக்குள்ளான பேரூந்தினை இராணுவ முகாமிற்குள் எடுத்துச் சென்றதுடன் முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் விட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து