உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். அவர் பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அவர்களில் இருவரை முழந்தாளிட வைத்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்​டியிருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்டயிட்டனர். அதன் பின்னர், தனது இராஜினாமா கடிதத்தை லொஹான் ரத்வத்த அனுப்பிவைத்துள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து