உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

50 மதுபான போத்தல்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்பியன் நகரிலிருந்து கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு செல்கையிலே கடமையிலிருந்த பொலிஸார் 175 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 150 மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்ப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து