உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் – நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று அச்சங்குளம் – நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதன்போது சுமார் 228 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் இலங்கை பெறுமதி 68 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.

எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து