உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஹபராதுவ பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரையிலிருந்து உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிக்டொப் விக்டர் (வயது 41) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனப் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றுலா பயணி கடந்த 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன் ஹபராதுவ, லுனுமோதர பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த நபர் கடலில் நீராடிவிட்டு பின்னர் கரையில் படுத்துறங்கியுள்ளார். இதன்போதே அவர் மரணமடைந்துள்ளார் என்று விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து