உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதியர்கள், அடையாள பணிபகிஸ்கரிப்பில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டனர்.குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா கால விசேட கொடுப்பனவாக 7 ஆயிரத்து 500 ரூபாயினை உடனடியாக வழங்குதல்,  விசேட விடுமுறை நாட்களில் கடமைக்கு சமூகமளித்தால் அதற்கான கொடுப்பனவை வழங்கல் மற்றும் தாதிய உத்தியோகர்களுக்கான கொரோனா கால பாதுகாப்பு அங்கிகள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவற்றை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய பகிஸ்கரிப்பு போராட்டம், மதியம் 12 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அவசர நோயாளர்களிற்கான உயிர்காப்பு சிகிச்சைகள் அனைத்தும், வழமைபோல இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தாதிய உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து