‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்.ஐ.ஆர்’.

இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.கே.பிரசன்னா மேற்கொண்டுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விநோதய சித்தம்’

பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.படத்தை பற்றி சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது.
நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்.